1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 18 டிசம்பர் 2020 (17:41 IST)

பஹத் பாசிலா நவாசுதீன் சித்திக்கா? கமலுக்கு வில்லன் தேடும் லோகேஷ் கனகராஜ்!

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க இரண்டு நடிகர்களை தேர்வு செய்து வைத்துள்ளாராம் லோகேஷ்.

கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள ’விக்ரம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் கமலிடம் இருந்து ஒரு வெற்றிப்படம் வந்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதுமட்டுமில்லாமல் ஒரு வெற்றிப்படம் கொடுத்தால் தேர்தலில் அது பயன்படும் என கமல் நினைக்கிறாராம். அதுமட்டுமில்லாமல் மாஸ்டர் படத்தின் மூலம் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் லோகேஷ் கனகராஜ் இடம்பிடித்துள்ளார்.

பக்கா ஆக்‌ஷன் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்க போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியை நடிக்க வைத்திருந்தார் லோகேஷ். இந்நிலையில் இந்த படத்துக்கு வில்லனாக நடிக்க பஹத் பாசில் மற்றும் நவாசுதீன் சித்திக் ஆகிய இரண்டு பேரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது திரைக்கதை பணிகளில் மும்முரமாக இருப்பதால் இன்னும் நடிகர்கள் தேர்வு குறித்து முடிவெடுக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.