1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 18 டிசம்பர் 2020 (13:38 IST)

கமல் பக்கம் வந்தது பிக்பாஸ் பக்கம் திரும்பியது?! – பிக்பாஸூக்கு எதிராக ஒலிக்கும் குரல்கள்!

கமல்ஹாசன் தொகுப்பாளராக பங்கேற்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் பேசிய நிலையில் பிக்பாஸை தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் சமூக வலைதளங்களில் எழ தொடங்கியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகளிடையே வார்த்தை மோதல் எழுந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மநீம தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து அதிமுகவை விமர்சித்தும், எம்ஜிஆரை சொந்தம் கொண்டாடியும் பேசி வந்ததற்கு பதிலடியாக பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி “கமல்ஹாசன் தனது படங்கள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழகத்தை சீரழிக்கிறார்” என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ ஆகியோரும் கமல்ஹாசனையும், பிக்பாஸ் நிகழ்ச்சியையும் விமர்சித்து பேசியுள்ளனர். இந்நிலையில் கலாச்சார சீரழிவை ஏற்படுத்துகிறது என தெரிந்தும் பிக்பாஸை ஒளிபரப்ப அரசு அனுமதித்திருப்பது ஏன் என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் எழ தொடங்கியுள்ளன. மேலும் அதிமுக அமைச்சர்கள் அந்த நிகழ்ச்சியை விமர்சித்ததை தொடர்ந்து அதிமுகவினரும் பிக்பாஸ் குறித்த விமர்சனங்களை முன்வைத்து வருவதால் பரபரப்பு எழுந்துள்ளது.