1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 18 டிசம்பர் 2020 (16:40 IST)

பாலாவுக்காக சூர்யா செய்த உதவி – உருவாகிறது பிரம்மாண்ட திரைப்படம்!

இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தை தயாரித்து அதில் கதாநாயகனாக நடிக்கவும் உள்ளாராம்.

இயக்குனர் பாலா தன் நண்பர் விக்ரம்முக்காக அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு படத்தை ‘வர்மா’ என்ற பெயரில் ரீமேக் செய்தார். ஆனால் அந்த படம் விக்ரம்முக்கும் படத்தின் தயாரிப்பாளருக்கும் திருப்தி இல்லாததால் அந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என முடிவெடுத்தனர். தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு படம் முழுவதுமாக எடுக்கப்பட்டு ரிலீஸ் ஆகாமல் வேறு இயக்குனரால் எடுக்கப்பட்டது இல்லை. சீனியர் இயக்குனரான பாலாவுக்கு இது மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் அவர் இயக்கிய சமீபத்திய படங்களான தாரை தப்பட்டை, நாச்சியார் உள்ளிட்ட படங்கள் எதுவும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. இதனால் ஒரு காலத்தில் அவர் படத்தில் நடிக்க நம்மை அழைக்க மாட்டாரா என ஏங்கிய கதாநாயகர்கள் எல்லாம் இப்போது அவர் படத்தில் நடிக்க அஞ்சினர். இந்நிலையில் பாலாவால் மிகப்பெரிய கதாநாயகனாக உருவாக்கப்பட்டவர்களில் ஒருவரான சூர்யா, பாலாவிடம் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் ஒரு படத்தை தயாரிப்பதாக வாக்குறுதி அளித்து அட்வான்ஸ் கொடுத்துள்ளாராம்.

அதுமட்டுமில்லாமல் அந்த படத்தில் தானே நடிக்கவும் சம்மதித்துள்ளாராம். இந்த படத்துக்காக சூர்யா நீண்ட நாட்கள் தேவைப்படுவதால் கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு அந்த படத்தில் நடிக்க உள்ளாராம் சூர்யா.