1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 18 டிசம்பர் 2020 (14:01 IST)

கமலே வரும் ரஜினி வரக்கூடாதா? ஹெச்.ராஜா கருத்து!

ரஜினியின் அரசியல் வருகை குறித்து எச் ராஜா பேசியுள்ளார்.
 
ரஜினிகாந்த் சமீபத்தில் அரசியல் கட்சியில் தொடங்கி அரசியலில் ஈடுபடுவதை உறுதி செய்தார். டிசம்பர் 31 ஆம் தேதி அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிப்பேன் என்றும் வரும் தேர்தலில் தனது கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் கூறினார்.   
 
மேலும் ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனா மூர்த்தி அவர்களும் தலைமை ஆலோசகராக தமிழருவி மணியன் அவர்களையும் அவர் நியமனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் ரஜினியின் அரசியல் வருகை குறித்து எச் ராஜா பேசியுள்ளார். அவர் கூறியதாவது, கலாச்சாரத்தை சீரழித்த கமல் அரசியலுக்கு வரும் போது, ரஜினி அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை என கூறியுள்ளார்.