1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 2 ஜூலை 2018 (21:34 IST)

விஸ்வரூபம் 2' படத்தின் புரமோஷனாக மாறிய பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகிவிட்டபோதிலும் இன்னும் கடந்த சீசன் போல விறுவிறுப்பு பெறவில்லை. முதல் வாரம் வெங்காயம், இரண்டாவது வாரம் வேலைக்காரர்-எஜமானர் டாஸ்க் இருந்தாலும் பெரும்பாலும் பாலாஜி-நித்யா பிரச்சனையே இந்த இரண்டு வாரங்களிலும் நடந்தது.
 
இந்த நிலையில் சனி, ஞாயிறு கமல் தோன்றும் நாட்களிலாவது நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முதல் வார இறுதியில் கமல் தோன்றியபோது விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் இருந்தது உண்மையே
 
ஆனால் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி, முழுக்க முழுக்க 'விஸ்வரூபம் 2' படத்தின் புரமோஷன் போலவே இருந்ததால் பார்வையாளர்கள் எரிச்சல் அடைந்தனர். விஸ்வரூபம் 2' படத்தின் பாடலை ஸ்ருதிஹாசன் பாடியது நன்றாக இருந்தாலும் பார்வையாளர்கள் எதிர்பார்த்தது பிக்பாஸ் வீட்டில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளத்தான். ஆனால் தனக்கு கிடைத்த மேடையை தனது படத்தின் புரமோஷனுக்காகவும், அரசியல் செல்வாக்கை அதிகரித்து கொள்வதற்காகவும் கமல் பயன்படுத்தினால் மற்ற நாட்கள் போலவே கமல் தோன்றும் நாட்களிலும் நிகழ்ச்சி போரடிக்க தொடங்கிவிடும் என்று பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் கருத்துக்கள் எழுந்துள்ளது. 
 
அதுமட்டுமின்றி கமல்ஹாசனின் சுயபுராணமும் தற்புகழ்ச்சியும் கொஞ்சம் அதிகமாக இருப்பது பார்வையாளர்களுக்கு வெறுப்பையும் தருகிறது. இனிவரும் நிகழ்ச்சிகளில் கமல்ஹாசன் மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதற்கு முன்னர் தன்னை திருத்தி கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.