1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 9 ஜூலை 2018 (22:57 IST)

பிக்பாஸ் 2: இந்த வார நாமினேஷன் போட்டியில் யார் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒரு புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவதும், வீட்டில் இருந்து வெளியேற நாமினேஷன் செய்யப்படுவதும் வழக்கம். இந்த நிலையில் இன்றைய தலைவராக ரம்யா தேர்வு செய்யப்பட்டார். இந்த  வீட்டில் தொடர்ந்து நான்கு வாரமும் தலைவராக பெண்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இந்த வார நாமினேஷன் கொஞ்சம் வித்தியாசமாக நடந்தது. ஒவ்வொருவராக கன்பெக்சன் அறைக்கு அழைக்காமல் மூன்று மூன்று பேர்களாக அழைத்து அவர்களில் ஒருவரை அவர்களே நாமிநேஷனுக்கு தேர்வு செய்ய வேண்டும் என்று பிக்பாஸ் கூறினார்.
 
அதன்படி யாஷிகா, நித்யா, பாலாஜி மற்றும் பொன்னம்பலம் தேர்வு செய்யப்பட்டனர். இதில் பொன்னம்பலத்திற்கு திடீரென மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளதால் அவர் வெளியேற வாய்ப்பே இல்லை. அதேபோல் பாலாஜி, நித்யா இருவரில் ஒருவரோ அல்லது இருவருமே வெளியே சென்றுவிட்டால் சுவாரஸ்யம் குறைந்துவிடும். எனவே இந்த வாரம் யாஷிகா வெளியே செல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது