1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 4 ஜூலை 2022 (16:52 IST)

நயன்தாரா - விக்னேஷ் சிவன் புதிய வீட்டில் குடியேறுவது எப்போது?

nayan
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நயன்தாரா. இவர் சமீபத்தில் தன் நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.பிரமாண்டமாக நடைபெற்ற இத்திருமணத்தில் முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து,  ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் படத்தில் ஷாருக்கானுடன் சூட்டிங்கில் நயன்தாரா   நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நயன் தாரா ஏற்கனவே சென்னை போயஸ் கார்டனில் வீடு வங்கியதாக தகவல் வெளியான நிலையில் இப்போது, முக்கிய தகவல் வெளி யாகிறது. அதன்படி, நயன் தாரா பெயரில் ஒரு வீடும் விக்னேஷ் சிவன் பெயரில் 1 வீடூம் என 8000சதுர அடி கொண்ட இரண்டு வீடுகள் வாங்கியுள்ளதாகவும், இந்த வீடுகளில் 1500 சதுர அடியில்  ஒரு குளியல் அறை உள்ளதாகவும்,  இதில், நீர் வீழ்ச்சி போன்ற செட்டிங்ஸ் உள்ளதாகவும், ஒரு தியேட்டர் இதிலுள்ளதாகவும், மொத்தம் இந்த வீட்டில் 3 மற்றும் 4 வது தளத்தில் இவர்கள் பயன்படுத்த லிப்டும், வேலையாட்களுக்கு தனி லிப்டும் எனக் கூறப்படுகிறது,

மேலும், இந்த வீட்டிற்கு பாலிவுட் ஸ்டார்களின் வீடுகளுக்கு இன்டீரியர் டிசைன் செய்யும் பிரபல நிறுவனம் ரூ.25 கோடியில் இன்டீரியர் டிசைன் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

இந்த பிரமாண்ட வீட்டு பணிகள் ஜோராக நடந்து வருவதால், இப்பணிகள் முடிவடைந்த பின் இந்த ஆண்டிற்குள்  நயன்தாரா – விக்னேஷ் தம்பதிகள் புதிய வீட்டில் குடிபுகுவார்கள் எனத் தெரிகிறது.

இப்புதிய வீட்டின் கிரஹப்பிரவேசத்திற்கு சினிமா நட்சத்திரங்கள் அழைக்கபடலாம் எனவும் தகவல் வெளியாகிறது.