வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 7 ஜூன் 2022 (12:03 IST)

இந்து முறைப்படி நயன் - விக்னேஷ் சிவன் திருமணம் - எப்போது எங்கு தெரியுமா?

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் இந்து முறைப்படி நடைபெற உள்ளது. 

 
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் சொந்த பிரச்சனைகள் பல சந்தித்து வேதனைகள் கடந்து இந்த வெற்றிடத்தை பிடித்துள்ளார். இன்று அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அவரை குறித்து ஏதேனும் செய்திகள் வெளியாகினால் அது வைரலாகிறது. அதிலும் நயன்தாராவின் திருமணம் குறித்த தகவல் வெளியானால் அது பெரும் கவனத்திற்கு அலவே இல்லை. 
 
கடந்த 2015 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தின் போது, நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. நிச்சயதார்த்தமும் முடிந்துள்ளது. இந்நிலையில் நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியானது. 
 
இந்நிலையில் தற்போது இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளதாவது, எங்கள் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் இந்து முறைப்படி நடைபெற உள்ளது. முதலில் திருப்பதியில் திருமணம் செய்யலாம் என நினைத்தோம். ஆனால் பயண தூரம் காரணமாக மகாபலிபுரத்திற்கு மாற்றிவிட்டோம். ஜூன் 9 ஆம் தேதி நண்பர்கள் உறவினர்கள் என குறுகிய வட்டாரத்தின் முன்னிலையில் திருமணம் செய்ய இருக்கிறோம் என தெரிவித்தார்.