புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 28 ஜனவரி 2019 (21:18 IST)

பள்ளியில் படிக்கும் போது காதலித்தேன் - ப்ரியா வாரியார் சர்ஃப்ரைஸ்

ப்ரியா வாரியார் நடிப்பில் உருவாகியுள்ள படம் அடார் லவ். இப்படம் பிப்ரவரி மாதம்  14 ஆம் தேதி ரிலீஸாகிறது. இப்படம் தெலுங்கு, இந்தி ,தமிழ், மலையாளம், ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தை விளம்பரம் செய்ய ப்ரியா வாரியார் சென்னை வந்தார். அப்பொழுது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது : தான் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது முதன் முதலாக ஒரு பையன் தன்னிடம் காதலை சொன்னதாகவும் அதற்கு தானும் காதலிப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் பின்னர் அது காதல் அல்ல இனக்கவர்ச்சி என்று தெரிந்து கொண்டு பிரிந்து விட்டதாகவும் கூறினார்.
 
மேலும் தமிழில் அவருக்குப் பிடித்த ஹீரோ விஜய் சேதுபதி என்றும், மலையாளத்தில் மோகன்லால் என்றும் தெரிவித்தார்.