திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 28 ஜனவரி 2019 (15:50 IST)

சிகிச்சைக்கு வரும் வாலிபர்களை மயக்கி உல்லாசம்: அம்பலமான நர்ஸின் காமலீலைகள்

கன்னியாகுமரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியார்றி வந்த இளம்பெண் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த இரு வாலிபர்களை மயக்கி உல்லாசம் அனுபவித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
குறிப்பிட்ட தனியார் மருத்துவமனையில் விபத்தில் அடிப்பட்டு சிகிச்சைக்காக வந்துள்ளார் ஒரு இளைஞர். சிகிச்சையின் போது நர்சுக்கும் அவருக்கும் கண்டதும் காதலாகி, நம்பர் பரிமாற்றம் செய்தி காதல் வளர்த்து, இந்த காதல் உல்லாசம் வரை சென்றது.இருவரும் திருமணமும் செய்துக்கொள்ள முடிவு செய்தனர். 
 
ஆனால், காலங்கள் கடந்ததும் நர்ஸ் அந்த இளைஞருடன் பேசுவதை தவிர்த்தார். ஒரு கட்டத்தில் வேலையை விட்டு மொத்தமாக அந்த இளைஞருடனான இணைப்பை துண்டித்துக்கொண்டார். இதனால் விரக்தியில் இருந்தார் அந்த இளைஞர். 
 
அப்போது அந்த இளைஞருக்கு வாட்ஸ் ஆப் மூலம் அந்த நர்சின் புகைப்படங்கள் வந்தது. அந்த புகைப்படத்தில் நர்ஸ் வேறு ஒரு ஆணுடன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார். சில வீடியோக்களில் எல்லையும் மீறியுள்ளார். இதில் திருப்பம் என்னெவெனில் அந்த புகைப்படங்கலீயும் வீடியோக்களையும் அனுப்பியதே அந்த நர்ஸ்தான். 
 
அதாவது, தனக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்துவிட்டது எனவும், நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம் என்பதையும் தெரிவிக்கவே இவ்வாறு புகைப்படங்களையும் வீடியோக்களையும் அனுப்பியுள்ளார். இதில் கவனிக்க வேண்டியது என்னெவெனில் தற்போது அந்த நர்ஸ் திருமணம் செய்துள்ளவரும் சிகிச்சைக்காக வந்தவர்தானாம். 
 
இந்த விவகாரம் போலீஸ் வரை சென்று கடைசியில் அந்த நர்ஸ் திருமணம் செய்துக்கொண்ட நபருடனே சென்றுவிட்டாராம். காதலில் ஏமார்ந்த சோகத்தில் உள்ளார் அந்த முதல் இளைஞர். நர்சின் இந்த காமலீலைகள் அந்த பகுதியில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.