ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 21 ஜூன் 2022 (17:28 IST)

நடிகர் கமலுக்கு மற்றுமொரு கவுரவம்.....ரசிகர்கள் மகிழ்ச்சி

உலகில் அதிக விருதுகள் வென்ற நடிகர் என்ற பெருமைக்குரியவர் கமல்ஹாசன். சமீபத்தில், கமல்,விஜய்சேதுபதில், சூர்யா, பகத்பாசில், ஆகியோர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் விக்ரம். இப்படம் பெரும் வசூல் சாதனை படைத்துள்ளது.

இப்படத்தின் வெற்றியை அடுத்து, கமல் அங்கு சென்றபோது பிரமாண்ட வரவற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஐக்கிய அரேபிய அமீரகம், மோகன்லால், த்ரிஷா, மம்முட்டி உள்ளிட்ட நடிகர்களுக்கு கோல்டன் விசா வழங்கியுள்ள நிலையில், தற்போது ஐக்கிய அரேபிய அமீரக அரசு இந்த வாரம்  நடிகர் கமலுக்கு கோல்டன் விசா அளித்துக் கவுரவிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் கமல் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.