1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 30 ஜூன் 2022 (17:02 IST)

காமெடி ரூட்டுக்கு செல்லும் ஜி வி பிரகாஷ்…. இயக்குனர் இவரா? லேட்டஸ்ட் தகவல்!

ஜி வி பிரகாஷ் இயக்குனர் பூபதி பாண்டியன் கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் நடிப்பு மற்றும் இசை என இரட்டைக் குதிரைகளில் வெற்றிகரமாக சவாரி செய்பவர் ஜி வி பிரகாஷ். சமீபத்தில் இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் ஐங்கரன் உள்ளிட்ட படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் இப்போது அவர் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கதையில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

இந்த படத்தை இயக்க திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கோட்டை போன்ற படங்களை இயக்கிய பூபதி பாண்டியனை தேர்வு செய்துள்ளார். இவர்கள் இருவரும் இணையும் படத்துக்கான தயாரிப்பாளரை நியமிக்கும் வேலைகளில் இருவரும் இறங்கியுள்ளனர்.