செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : சனி, 1 டிசம்பர் 2018 (20:49 IST)

இனி எல்லாமே இப்படித்தேன்... விஷ்ணு விஷால் மட்டும் விதிவிலக்கா என்ன?

முன்பு படத்தை வெளியிடுவதுக்கு மட்டுமே  விளம்பரம் இருக்கும். அப்புறம் ஆடியோ வெளியீட்ட பயங்கர விளம்பரம் பண்ண ஆரம்பிச்சாங்க. இப்ப படத்துல வர்ற. கேரக்டரையே விளம்பரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இதில் நடிகர் விஷ்ணு விஷால் மட்டும் விதிவிலக்கா என்ன? அவர் தயாரித்து நடித்து உள்ள சிலுக்குவார்பட்டி சிங்கம்  படத்தில் நடித்துள்ளவர்களின் கேரக்டர் பெயர்கள் இன்று விளம்பரத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முண்டாசுப்பட்டி பட இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில்  கடந்த மாதம் ராட்சசன் திரைப்படம் வெளியானது. இது விஷ்ணு விஷாலின் சினிமா வாழ்க்கையில் சிறந்த படம் என்ற பெயரை எடுத்தது . இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் சீரியஸான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் அவர்   சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார் .

இந்த முறை சிரிப்பு போலீசாக சத்திய மூர்த்தி என்ற பெயரில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார் . இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ரெஜினா கஸாண்ட்ரா , ராஜி என்ற பெயரில் நடித்துள்ளார். இவருடன் கனகா என்ற கதாபாத்திரத்தில் ஓவியா நடித்து உள்ளார். யோகி பாபு இந்தப் படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

லிவிங்ஸ்டன்  முத்தையா என்ற கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். அறிமுக இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். டிசம்பர் 21ம் தேதி சிலுக்குவார்பட்டி சிங்கம் வெளியாகும் என அறிவித்து உள்ளார்கள்.