செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 1 டிசம்பர் 2018 (18:56 IST)

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் புது அப்டேட் ...

இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் முதல் மோசன் போஸ்டர் வெளியாகி பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் அஜித் இப்படத்தில் ஏற்றுள்ள தூக்குதுரை கதாப்பாத்திரம் பற்றி இப்போதே ரசிகர்களிடம் ஏகப்பட்ட எதிர்பர்ப்பு ஏற்பட்டுள்ளது.

அஜித் ஏற்றுள்ள கதாபாத்திரம்:
 
திருநெல்வெலி மாவட்டத்திலுள்ள சிங்கம்பட்டி ஜமீனின் 24  வது அரசர்தான் தூக்கு துரை. தன்னுயிர் தோழனைக் காப்பாற்றுவதற்காக இவர் ஒரு கொலை செய்ய வேண்டியதாயிற்று  எனவே அந்த கொலை செய்த குற்றத்திற்காக இவருக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. 
 
ஆனால் எந்தக் கவலையும் இல்லாமல் தூக்கு மேடையிலும் சிரித்தபடியே நின்று அப்படியே தண்டைனையேற்றுக் கொண்டாராம். எனவே மக்களின் மனதில் இன்றும் நிலைத்து நின்று வாழ்ந்துவருகிறார்.
இந்த நெல்லை மாவட்டத்தில் சிங்கம் பட்டியில் வசித்த ஜமீன்கள் தம் அரண்மனை வளாகத்தில் மகாதேவர் என்ற பெயரில் கோவிலைக் கட்டி அதை  தினமும்  வணங்கி வந்தார்களாம்.
 
அஜித்தின் கதாபாத்திரமும் நண்பனுக்காக தியாகம் செய்கிற மாதிரியாகவே விஸ்வாசம் படத்தில் பின்னப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின்றன. அதனால்தான் இப்படத்தில் அஜித்தின் கதாபாத்திரத்திற்கு தூக்கு துரையின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
இந்த கோவிலில் தான் தூக்கு துறையில் சிலையும் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வளவு சுவராஸ்யம் உள்ள விஸ்வாசம் படம் எப்படி இருக்கும் என்பது படம் வெளீயான பிறகுதான் தெரியும்.