திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 1 டிசம்பர் 2018 (17:58 IST)

இமயமலையில் நிலநடுக்கம்: இந்தியாவிற்கு காத்திருக்கும் பேராபத்து

இந்தியாவின் அரணாக காணப்படும் இமயமலையில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதனால் பேராபத்து உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர். 
 
ஆம், இமயமலை பகுதியில் 8.5 என்ற ரிக்டர் அளவிற்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதாவது பெங்களூரில் உள்ள ஜவகர்லால் நேரு விஞ்ஞான ஆய்வு மையத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுனர் சி.பி. ராஜேந்திரன், அகமதாபாத் விண்வெளி ஆய்வு மையத்தை சேர்ந்த கே.எம்.ஸ்ரீஜித் மற்றும் டெல்லியின் தேசிய புவியியல் ஆய்வு மையத்தை சேர்ந்த வினீத் கஹலாட் ஆகியோர் தனித்தனியாக மேற்கொண்ட ஆய்வில் இந்த நிலக்கடுக்கம் குறித்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.. 
 
இதனை உறுதி படுத்தும் விதமாக கூகுள் எர்த் மற்றும் இஸ்ரோவின் கார்டோசாட் 1 செயற்கைக் கோளும் எச்சரிக்கைக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. 
 
எச்சரிக்கையின்படி நிலநடுக்கும் ஏற்பட்டால் நேபாள - இந்திய எல்லை பகுதியில் இமயமலை 15 மீட்டர் வரை சரிய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.