1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 1 டிசம்பர் 2018 (18:32 IST)

வீட்டிலேயே மசாஜ் செண்டர்: ஆசையாய் போனவருக்கு 4 பேரால் காத்திருந்த ஆப்பு

சென்னை மாதவரத்தில் வசித்து வருபவர் நிர்மலா. இவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனால் மாத சம்பளத்திற்காக அண்ணா நகரில் உள்ள மசாஜ் செண்டரில் வேலைப்பார்த்து வந்தார். 
 
அந்த மசாஜ் செண்டருக்கு வந்த கஸ்டமர் கிருஷ்ணமூர்த்திக்கும் இவருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. கிருஷ்ணமூர்த்தி ஒரு தொழிலதிபர். இவருடன் நல்ல பழக்கம் ஏற்பட்ட காரணத்தால் வேலையை விட்டுவிட்டு வீட்டிலேயே மசாஜ் செண்டர் துவங்கினார் நிர்மலா. 
 
இதனால் கிருஷ்ணமூர்த்தி மசாஜ் செய்ய நிர்மலாவின் வீட்டிற்கே செல்ல துவங்கினார். வழக்கம் போல், போன வாரம் ஒருநாள், தனக்கு மசாஜ் செய்ய வேண்டும் என்று கிருஷ்ண மூர்த்தி நிர்மலா வீட்டிற்கு சென்றுள்ளார். 
 
அப்போது நிர்மலா தனது தோழி ஷீலா மற்றும் ஆட்டோ டிரைவர் மணிகண்டனை கிருஷ்ண மூர்த்திக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின்னர் நிர்மலா, ஷீலாவுடன் கிருஷ்ணமூர்த்தி ஜாலியாக இருந்து உள்ளார். 
அப்போது வீட்டிற்குள் நுழைந்த 4 பேர் கிருஷ்ண மூர்த்தியை மிரட்டி அவரிடம் இருந்து தங்க சையின், ரூ.70,000 பணத்தை பரித்து சென்றனர். இது குறித்து உடனே கிருஷ்ணமூர்த்தி போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். 
 
போலீஸாரின் விசாரணையில் அந்த 4 பேர் நிர்மலாவின் ஆட்கள் என்றும், நிர்மலா இது போன்று நிறைய பேரிடம் பணத்தை ஏமாற்றியதும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த 4 பேர், நிர்மலா, ஷிலா, ஆட்டோ டிரைவர் என 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.