1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 16 அக்டோபர் 2017 (14:05 IST)

மெர்சலுடன் போட்டிபோடும் மூன்று திரைப்படங்கள் எது தெரியுமா?

திரைப்படங்களுக்கு 10 சதவீத கேளிக்கை வரி விதிக்கப்பட்டதற்கு திரையரங்கு உரிமையாளர்களும். திரைப்பட  தயாரிப்பாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

 
இந்நிலையில் தமிழக அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் தமிழக அமைச்சர்கள், தயாரிப்பாளர்கள் சங்கம்,  திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், சினிமா விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதன் காரணமாக கேளிகை வரி 8 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதையடுத்து தீபாவளிக்கு படங்கள் வெளியாவதில் ஏற்பட்ட  சிக்கல் நீங்கியது.
 
மெர்சல் படம் தீபாவளிக்கு வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில், புதன் கிழமை படம் வெளியாகும் என  ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் அடிப்படையில் மெர்சல் வெளியாவது  உறுதியாகியுள்ளது.
 
இப்படத்திற்கு போட்டியாக மேலும் மூன்று படங்கள் வெளியாவதாக கூறப்படுகிறது. அவை நடிகர் சரத் குமார் நடிப்பில்  ‘சென்னையில் ஒரு நாள் 2’, வைபவ் மற்றும் பிரியா பவானி நடித்துள்ள ‘மேயாத மான்’ மற்றும் சசிகுமார் நடிப்பில் கொடி வீரன் ஆகிய படங்கள் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.