விஜய் டிவியுடன் ஒப்பந்தம் முடிந்தது.!தமிழ் பிக் பாஸ் 3 இந்த டிவியில் தானா?

Last Updated: புதன், 6 மார்ச் 2019 (15:45 IST)
கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ்.  ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்ற இந்த நிகழ்ச்சி சீசன் 1 , சீசன் 2 , என்ற இரண்டு பாகமும் பட்டிதொட்டியெங்கும் பரவியது.


 
கமல் தொகுத்து வழங்கி மாபெரும் வெற்றிபெற்ற  இந்நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் எப்போது வெளியாகும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த வேளையில் இந்நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனமான எண்டிமால் நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 
அதாவது, விஜய் தொலைக்காட்சியுடன்  நாங்கள் போட்ட ஒப்பந்தம் கடந்த ஆண்டுடன் நிறைவடைந்து விட்டது.  தற்போது தமிழில் இந்த ஆண்டு பிக் பாஸ் 3 நிகழ்ச்சி நடத்துவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் இன்னும் ஒரு சில மாதத்தில் இதற்கான ஒப்பந்தம் போடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 
கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த போது இந்த ஆண்டின் நிகழ்ச்சி பாஸ் நிகழ்ச்சி கலர்ஸ் தொலைக்காட்சி ஒளிபரப்ப போவதாக சில தகவல்கள் வெளியாகி இருந்தது. எனவே இந்த ஆண்டு கலர்ஸ் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
அதுமட்டுமின்றி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல் தற்போது அரசியலில் மும்முரம் காட்டி வருவதால் அவர் இந்த சீசனில் பங்கு பெறுவாரா மாட்டாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :