ஜூலியை ஆச்சரியப்பட வைத்த விஷயம் என்ன தெரியுமா?

CM| Last Updated: புதன், 6 ஜூன் 2018 (21:00 IST)
இந்துக்களின் வழிபாட்டு முறை, விரதம் இருக்கும் முறைகளைத் தெரிந்துகொண்டு ஆச்சர்யப்பட்டுப் போயிருக்கிறார் ஜூலி.
‘பிக் பாஸ்’ மூலம் பேமஸான ஜூலி, ஹீரோயினாக நடித்துள்ள படம் ‘அம்மன் தாயி’. இந்தப் படத்தில் அவர் அம்மனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அன்புவும், வில்லனாக சரணும் அறிமுகமாகின்றனர். அம்மனை கட்டுப்படுத்தும் வில்லனை, அம்மன் எப்படி அழிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. கோயில் திருவிழாக்களில் எடுக்கப்படும் முளைப்பாரியில் இருந்து அம்மன் எப்படி வெளிவருகிறது என்பதை கிராபிக்ஸ் உதவியின் மூலம்  படமாக்கியிருக்கின்றனர்.
இந்தப் படத்தில் நடிக்க ஜூலியை அணுகியபோது, கிறிஸ்தவப் பெண்ணான நான் இதற்குப் பொருத்தமாக இருப்பேனா? என்று சந்தேகத்துடன் கேட்டிருக்கிறார் ஜூலி. அவருக்கு அம்மன் வேடமிட்டு, போட்டோஷூட் எடுத்துக் காட்டியதும் உடனே சம்மதம் சொல்லிவிட்டார். இந்தப் படத்துக்காக இந்து தெய்வங்களை வழிபடுவது எப்படி, விரதமிருக்கும் முறை ஆகியவற்றைத் தெரிந்துகொண்ட ஜூலி, ஆச்சர்யப்பட்டுப் போயிருக்கிறார். மகேஸ்வரன் - சந்திரஹாசன் இயக்கியுள்ள  இந்தப் படம், அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வெளியாக இருக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :