விஜய்க்காக அஜித் மகள் செய்த காரியம் - புகழ்ந்து தள்ளிய தல, தளபதி ரசிகர்கள்!

Last Updated: திங்கள், 14 ஜனவரி 2019 (15:37 IST)
தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார்  நடிப்பில் பொங்கல் விருந்தாக ஜனவரி 10 தேதி வெளியான படம் விஸ்வாசம் . நீண்ட நாட்களாக  அஜித்தின் படத்திற்காக காத்திருந்த ரசிகர்கள் இப்படத்தை வெகுவாக திருவிழாவை போன்று கொண்டாடி தீர்த்தனர். 


 
இயக்குனர் சிவா இயக்கிய இப்படத்தில் டி இமானின் இசை ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியது. கதாநாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருந்த இப்படத்தில் அஜித்தின் மகளாக  பேபி அனிகா நடித்து  அசத்தியிருந்தார். 
 
விஸ்வாசம் படத்தில் அஜித்-அனிகாவின் அப்பா மகள் பாசம் படம் பார்த்த ஆடியன்ஸை கண் கலங்க வைத்தது.  
இவர் ஏற்கனவே  அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’படத்திலும்  அவருக்கும் மகளாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது விஸ்வாசம் படத்திலும் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. 

 


இதில் மேலும் படிக்கவும் :