'தளபதி 63' படத்திற்கு போட்டியாக உருவாகும் கதிர் படத்தின் டைட்டில்

Last Modified புதன், 16 ஜனவரி 2019 (07:42 IST)
விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகவுள்ள 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படம் பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த படம் என்றும், அதில் விஜய் பயிற்சியாளராக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் 'பரியேறும் பெருமாள்' கதிர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள நிலையில் கால்பந்து விளையாட்டு குறித்த இன்னொரு படத்தில் கதிர் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'ஜடா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் கதிர் ஒரு கால்பந்து முன் உட்கார்ந்த நிலையில் உள்ளதால் இந்த படம் 'தளபதி 63' படத்திற்கு போட்டியாக இருக்குமோ என்று கருதப்படுகிறது


குமரன் என்பவர் இயக்கவுள்ள இந்த படத்தில் கதிர், ரோஷினி, சமுத்திரக்கனி, யோகிபாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார். சூர்யா ஒளிப்பதிவில், ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பில் ஸ்ரீகாந்த் கலை இயக்கத்தில் விமல் ராம்போ ஸ்டண்ட் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :