ஆடை நடிகைக்கு அடித்த அதிர்ஷம்... வெற்றிமாறன் இயக்கத்தில் முதல் படம்!
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்ற தொகுப்பாளினி ரம்யாவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு இடம் உள்ளது. ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது மட்டுமல்லாது "ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன், ஆடை ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் ரம்யா நடித்திருந்தார்.
ஆடை படத்தில் அமலா பாலின் நெருங்கிய தோழியாக நடித்திருந்த ரம்யா அமலா பாலுடன் லிப் டூ லிப் முத்தக்காட்சியில் நடித்து சர்ச்சைக்குள்ளானார். அந்த படம் வெளிவந்தது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகள், சினிமா என பிஸியாக இருந்து வருகிறார். மேலும், விஜய்யின் பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கி நிறைய பாராட்டுகளை பெற்றார்.
இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் முதன் முறையாக ஹீரோயினாக ரம்யா அறிமுகமாகிறார். கூடிய விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.