செவ்வாய், 18 ஜூன் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : புதன், 19 பிப்ரவரி 2020 (14:50 IST)

வலிமை ஷூட்டிங்கில் அஜித் கிழே விழுந்த வீடியோ... பதற வைக்கும் சம்பவம்!

அல்டிமேட் ஸ்டார் தல அஜித் நேர்கொண்ட பார்வை பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் – போனி கபூர் கூட்டணியில்  "வலிமை" படத்தில் நடிக்கிறார். போலீஸ் அதிகாரியாக அஜித் நடிக்கவிருக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 
 
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அஜித் ரசிகர்களுக்கு இன்று அதிர்ச்சியளிக்கக்கூடிய செய்தி ஒன்று வெளிவந்தது. அதாவது வலிமை படத்தின் படப்பிடிப்பின் போது டூப் இல்லாமல் பைக் ஓட்டும் ரிஸ்க்கான காட்சியின் போது விபத்து நேரிட்டு கை , கால்களில் பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. 
 
இதையடுத்து முதலுதவி மட்டும் எடுத்துக்கொண்டு படப்பிடிப்பில் தொடர்ந்து நடித்து வருவதாக தகவல் கிடைத்த நிலையில் சற்றுமுன் அஜித்தின் விபத்து வீடியோ ஒன்று ட்விட்டரில் வெளியாகியுள்ளது.  அதில் பைக் ஒட்டி வரும் போது பாலத்தின் கீழே உள்ள படகில் விழுந்துவிட்டார். இந்த வீடியோ தற்போது சமூகலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு சிலர்  இது Fake  வீடியோ பொய்யான வீடியோவை பரப்பாதீர்...  என கூறி வருகின்றனர்.