திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : புதன், 19 பிப்ரவரி 2020 (11:42 IST)

ரத்த காயத்துடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்ரன் - பதறிப்போன ரசிகர்கள்....!

தமிழ் சினிமாவின் 90ஸ் கால கட்டத்தில் தனது இடுப்பசைவால் ஒட்டுமொத்த ரசிகர்களயும் கவர்ந்த நடிகை சிம்ரன். தொடந்து பல வருடங்களாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் திருமணம் செய்துகொண்டு பின்னர் குடும்ப வாழ்வில் செட்டில் ஆகிவிட்டார்.
 
பின்னர் சினிமாவிற்கு சில ஆண்டுகள் கேப் விட்டிருந்த சிம்ரன் ரஜியின் பேட்ட படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் செகண்ட் இன்னிங்ஸ் கொடுத்தார். 43 வயதாகும் இவர் அழகிலும் இளமையிலும் கொஞ்சம் கூட மாற்றமில்லாமல் அதே துள்ளலுடன் நடித்து மீண்டும் ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ளார்.
 
இந்நிலையில் சமீபத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு Mai Aur Meri KHWAISHEIN என்ற மியூசிக் வீடியோவை தனது யூடியூப் சேனனில் வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்தார். தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் படத்தின் படப்பிடிப்போது எடுக்கப்பட்டது எனக்கூறி கால், மற்றும் நெத்தியில் ரத்த காயத்துடன் இருக்கும் புகைப்படமொன்றை வெளியிட்டு ரசிகர்களை ஒரு நிமிடம் பதற வைத்துவிட்டார். இதோ அந்த புகைப்படம்...