வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 12 அக்டோபர் 2020 (15:39 IST)

ராமராஜன் டவுசரில் நாயை துரத்தி பிடிக்கும் நடிகை ரம்யா...!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்ற தொகுப்பாளினி ரம்யாவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு இடம் உள்ளது. ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது மட்டுமல்லாது "ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன்" ஆகிய படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா தற்போது கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

2014ம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்துகொண்ட ரம்யா பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். விவாகரத்து பெற்றதும் மீண்டும் தனது பணிக்கு திரும்பிய ரம்யா அடுத்தடுத்து படங்களில் நடிப்பது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என படு பிஸியாக வலம் வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் ரம்யா அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது தன் செல்ல நாயுடன் ஓடிப்பிடித்து விளையாடிய வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர் ஒருவர்,  " ராமராஜன் டவுசர் " என அவரது ஷார்ட்ஸ்சை நக்கலாக கலாய்த்து தள்ளியுள்ளார்