1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 12 அக்டோபர் 2020 (11:11 IST)

இன்ஸ்டால Mass'அ இருந்த டோலி Bigg Boss'ல தமாஷா இருக்கீங்க!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.

அத்துடன் 'ரெட்டை ரோஜா' சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார்.  இந்தகொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருந்து வந்த ஷிவானி கடந்த சில மாதங்களாகவே  தினம் தினம் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலமாகிவிட்டார்.

இதன் மூலம் கிடைத்தது தான் பிக்பாஸ் வாய்ப்பு. தற்ப்போது கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற ஷிவானி அங்கு யாருடனும் மிங்கில் ஆகி பேசுவது கிடையாது. அத்துடன் இன்ஸ்டாவில் கவர்ச்சியுடன் அழகாக தெரிஞ்ச ஷிவானி பிக்பாஸில் கொஞ்சம் மொக்கையாக இருக்கிறார். இதனால் ட்ரோல் செய்து கலாய்த்து வருகின்றனர். பிக்பாஸில் இருக்கும் ஷிவானியின் இன்ஸ்டாவை தற்போதைக்கு அவரது குடும்ப உறுப்பினர் உபயோகித்து தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். ஆனால், முன்பு இருந்த வரவேற்பு தற்ப்போது இல்லை என்பதே ஊரறிந்த உண்மை...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

♥️ #teamshivaninarayanan #bigbosstamilseason4

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on