வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 7 மார்ச் 2019 (18:34 IST)

கல்யாணமாகி குழந்தைக்கு தாயான நிலையில் இப்படி ஒரு ஆடை தேவையா.! அஞ்சனாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனா  தனியார்  தொலைக்காட்சியில் கடந்த  10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர்.  தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் “கயல்” படத்தின் ஹீரோவான  சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயகியிருந்தார்.  


 
சந்திரன் – அஞ்சனா தம்பதியருக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு ருத்ராக்ஸ் என்று பெயர் வைத்துள்ளனர். குழந்தை பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கவுள்ளார் என்ற தகவல் வெளிவந்து அஞ்சனா ரசிகர்களை குஷிப்படுத்தியது 
 
இந்நிலையில் ஒரு குழந்தைக்கு தாயான போதும் அஞ்சனா குட்டை பாவாடை ஒன்றில் போஸ் கொடுத்த ஸ்டைலிஷ் புகைப்படத்தை தனது தனது இன்ஸ்டாகிரேம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் அஞ்சனாவை வறுத்தெடுத்து வருகின்றனர்.