1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 16 டிசம்பர் 2022 (08:05 IST)

ஐஸ்வர்யா ராயுடனான காதல் பற்றிய கேள்விக்கு விவேக் ஓப்ராயின் பதில்!

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கும் விதமாக் மீம்ஸ் ஒன்றை டிவிட்டரில் வெளியிட்ட விவேக் ஓப்ராய் அதற்காக மன்னிப்புக் கோரியுள்ளார்.

நடிகர் விவேக் ஓப்ராயும், ஐஸ்வர்யா ராயும் காதலிப்பதாகவும் அவர்கள் திருமணம் நிச்சயதார்த்தம் வரை சென்று பின்னர் நிறுத்தப்பட்டதாகவும் அப்போது ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் ஐஸ்வர்யா பின்னர் அபிஷேக் பச்சனைக் கல்யாணம் செய்துகொண்டார். முன்னதாக ஐஸ்வர்யா ராய் சல்மான் கானுடனும் காதலில் இருந்து பின்னர் பிரிந்தார்.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலின் போது விவேக் ஓப்ராய் ஐஸ்வர்யா ராயை இழிவுபடுத்தும் விதமாக சில பதிவுகளைப் பகிர்ந்திருந்தார். பின்னர் விவேக் ஓபராய் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் இப்போது அவர் ஒரு நேர்காணலில் கலந்துகொண்ட போது அவரிடம் ஐஸ்வர்யா ராயுடனான காதல் பற்றி கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “அந்த விஷயம் முடிந்து விட்டது. அதை தூசி தட்ட வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.