வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 9 டிசம்பர் 2022 (15:41 IST)

ரயில் மோதி காதல் ஜோடி பலி

Train
ரயில் தண்டவாளம் அருகில் பேசிக் கொண்டிருந்த காதலர்கள் ரயில் மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

பொதுவாக காதலர்கள் பீச், பார்க,  உள்ளிட்ட இடங்களில் தான் சந்தித்துப் பேசிக் கொண்டிருப்பார்கள்.

இல்லையென்றால் சாலையில் நடந்தபடி பேசிக் கொண்டே செல்வார்கள். ஆனால், சென்னையில் மறைமலை நகரில்  வசித்து வந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்ஸ் மற்றும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஷெர்லின் என்ற பெண்ணும்  சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இவர்கள் அடிக்கடி சந்தித்துப் பேசி வந்துள்ளனர். சம்பவத்தன்று  அவர்கள்  இரவு வேளையில் இரவில் பாதை அருகில் சந்தித்துப் பேசுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

நேற்றும் அதேபோல் ரயில் தண்டவாளம் அருகில் நின்று இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது,  ரயில் அவர்கள் மீது மோதியது.

இதில், இருவரும் உடல் சிதறி பலியாகினர். இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், இருவரின் உடலை மீட்டு, உடற்கூறு சோதனைக்கான மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Edited By Sinoj