1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. woman who get four marriage arrested

4 ஆண்களை திருமணம் செய்த பெண் இரண்டாவது கணவருடன் கைது!

abhinaya
4 ஆண்களை திருமணம் செய்த பெண் இரண்டாவது கணவருடன் கைது!
நான்கு ஆண்களை திருமணம் செய்து அவர்களுடைய பணம் நகைகளை ஏமாற்றி தலைமறைவான அபிநயா என்ற பெண் இரண்டாவது கணவருடன் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
கடந்த 2011ஆம் ஆண்டு அபிநயா என்ற பெண் முதல் திருமணம் செய்த நிலையில் 2013ஆம் ஆண்டு இளைஞர் ஒருவரை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்தார். அதன் பின்னர் இரண்டாவது கணவரின் ஒத்துழைப்பில் மூன்றாவதாக ஆட்டோ டிரைவர் ஒருவரையும், நான்காவது நாகராஜ் என்பவரையும் திருமணம் செய்து அவர்களிடம் உள்ள நகைகளை பணத்தை திருடி இரண்டாவது கணவருடன் வாழ்ந்து வந்துள்ளார்
 
இந்த நிலையில் நான்காவது கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் அபிநயா கைது செய்யப்பட்டார் என்பதும் அவரையும் அவரது இரண்டாவது கணவரையும் கைது செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
உழைத்தவர்களுக்கு சீட் கிடைப்பதில்லை- திமுக மூத்த தலைவர் ஆதங்கம்!