செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 7 நவம்பர் 2018 (14:16 IST)

அஜித் படத்தின் டான்ஸர் திடீர் மரணம்!

அஜித் தற்போது விசுவாசம் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை இயக்குநர் சிவா இயக்குகிறார். இதன் படபிடிப்பு மொத்தமும் முடிந்திருக்கும் நிலையில் ஒருபாடல் மட்டும் எஞ்சியிருப்பதாக படக்குழு தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த பாடலின் படப்பிடிப்பு நடக்கும் போது அஜித்துடன் நடனம் ஆடிய நடனக்குழுவில் இருந்த சரவணன் என்பவர் படப்பிடிப்பு நடக்கும் போது மயங்கி விழுந்தார். அவரை அருகே இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
 
ஆனால் மருத்துவர் சிகிச்சை அளித்தும் அவர் பலனின்றி உயிரிழந்தார்.
 
இதனையடுத்து சைதாப்பேடையில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் கலந்து நடிகர் அஜித் சரவணனின் குடும்பத்துக்கு பொருளாதார ரீதியாக உதவிகள் செய்ததாக தகவல்கள் வெளியாகின்றன.