கடலிலும் விஸ்வாசம் பேனர் வைத்து கலாட்டா... அமர்களப்படுத்தும் அஜித் ரசிகர்கள்

Last Updated: புதன், 9 ஜனவரி 2019 (17:43 IST)
பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி அதாவது நாளை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. 
 
இதற்காக அஜித்தின் ரசிகர்கள் டிக்கெட்களை முன்பதிவு செய்து அஜித்தை திரையில் காண மரண வெய்ட்டிங்கில் காத்திருக்கின்றனர். இத்திரைப்படம் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ளதால் படத்தின் எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது. 
 
தற்போது இதற்கான விளம்பரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அஜித்தின் ரசிகர்கள் விஸ்வாசம் பேனர்களையும் கட் அவுட்களையும் வைத்து கலக்கி வருகின்றனர். 
 
அதன்படி எல்.இ.டி கட் அவுட் வைத்து, அதில் விஸ்வாசம் படத்தின் போஸ்டர்கள் மாறி, மாறி வரும்படி செய்துள்ளனர். தற்போது அஜீத் ரசிகர்கள் கடலிலும் பேனர் வைத்து அசத்தியுள்ளனர். இது குறித்த வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :