கடன் பாக்கி உள்ளதால் விஸ்வாசம் வெளியாவதில் சிக்கல் ! அஜித் என்ன செய்வார் ...?

ajith
Last Updated: புதன், 9 ஜனவரி 2019 (14:04 IST)
எந்த ஒரு படம் ரிலீஸுக்கு  வெளிவரும் போது பல்வேறு பிரச்சனைகளைக் கடந்து தான் படம் வெளிவரும் என்ற நிலைமையில் தமிழ் சினிமா உள்ளது. தற்போது அதே நிலைமைதான் அஜித் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள விஸ்வாசம் படத்திற்கும் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின்றன.
சமீபத்தில் ரிலீசான சில படங்களுக்கு கடன் பிரச்சனைகள் இருந்ததால் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் படத்தயாரிப்பு நிறுவனம் பேசித் தீர்த்து சுமூகமாக படம் ரிலீஸாக வைத்தனர். 96 படமும் , சீமராஜா படமும் வெளியாவதில் இப்படி சிக்கல் ஏற்பட்ட போது சம்பந்தப் பட்ட நடிகர்கள் உத்தரவாதம் அளித்தன் பேரில் படம் குறிப்பிட்ட தேதியில் ரிலீஸானது.
 
தற்போது அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு அதே போன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. கோவை, திருப்பூர் ,ஈரோடு , பகுதிகளில் விநியோகஸ்தர் சாய்பாபா பெற்றிருந்த கடன் பாக்கி 78 ரூபாய் திருப்பித்தராததால் அப்பகுதிகளில் படத்தை வெளியிட தடைகோரி சினிமா பைனான்ஸியர் உமாபதி என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.
 
இதனையடுத்து அப்பகுதிகளில் விஸ்வாசம் படத்தை  வெளியிட தடைவிதிக்கப்பட்டது.
 
இந்நிலையில் பாக்கி தொகையில் 35 லட்ச ரூபாய் இன்றே வழங்கவதாகவும் மீதம் உள்ள தொகையை 4 வார காலத்துக்குள் வழங்குவதாக உத்தரவாதம் அளிப்பதாக விஸ்வாசம் பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து, தடையை நீக்க கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.
 
பிரச்சனை இப்படி இருக்க அஜித் இது குறித்து என்ன முடிவு எடுப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்து உள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :