ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : புதன், 19 செப்டம்பர் 2018 (15:32 IST)

தல அஜித் எனக்கு கற்றுக் கொடுத்தார்- பாலிவுட் நடிகர் புகழாரம்

தல அஜித் நடிக்கும் விசுவாசம் படத்தின் இறுதிகட்ட சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது .

இந்த படத்தில் அஜீத்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார் . தம்பி ராமையா, ரோபோ சங்கர், விவேக் ரமேஷ் திலக், யோகி பாபு , போஸ் வெங்கட், கோவை சரளா, ஜாங்கிரி மதுமிதா உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர் .

பாலிவுட் நடிகர் ரவி அவனா விசுவாசம் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து அவர் கூறுகையில், தல அஜித் உடன் தான் என்னுடைய முதல் தமிழ் படத்தின் ஷூட்டிங் நடந்துள்ளது . அவருடன் இணைந்து நடித்தது சிறந்த அனுபவம்.  மிகச்சிறந்த நல்ல மனிதரான அஜித்திடம் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளலாம்' என்றார்.

விசுவாசம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது இந்த படத்தில் அஜித் இரண்டு வேடத்தில் நடித்துள்ளார்.