கொரோனாவால் விஷால் உடலில் ஏற்பட்ட மாற்றம் – பழைய நிலைக்கு திரும்ப தீவிர வொர்க் அவ்ட்!
கொரோனா பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்துள்ள விஷால் உடல் பருமனைக் குறைக்க தீவிரமாக வொர்க் அவுட் செய்து வருகின்றார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரும் தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரில் ஒருவருமான நடிகர் விஷால், அவருடைய தந்தை ஜிகே ரெட்டி மற்றும் விஷாலின் மேனேஜர் ஆகிய மூவரும் கொரோனா வைரஸால் சமீபத்தில் பாதிக்கப்பட்டு அதன் பின் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமானவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதன் பின்னர் சிகிச்சையில் கொரோனாவில் இருந்த மீண்ட விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டு கொரோனா பாதித்தவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக பேசினார்.
ஆனால் அந்த வீடியோவிலேயே விஷால் மிகவும் சோர்வாகவும் காணப்பட்டார். உடல் எடை கூடியும் கண்கள் வீங்கியும் காணப்பட்டார். இந்நிலையில் மீண்டும் தன்னுடைய பழைய உடலைக் கொண்டு வருவதற்காக இப்போது அவர் தீவிர வொர்க் அவுட் செய்து வருகிறார்.