கணவருடன் இரட்டை அர்த்த கேப்ஷனோடு புகைப்படம் வெளியிட்ட நடிகை!

Last Modified புதன், 12 ஆகஸ்ட் 2020 (09:55 IST)

நடிகை மனிஷா யாதவ் தனது கணவரோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதில் ஒரு கேப்ஷன் வெளியிட்டுள்ளார்.

வழக்கு எண் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை மனிஷா யாதவ். தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர் முன்னணி இயக்குனர் தனக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக புகார் கூறி சர்ச்சையைக் கிளப்பினார். அதன் பிறகு திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கியுள்ளார்.

இந்நிலையில் அவர் தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதன் கீழே இரட்டை அர்த்தம் தொனிக்கும் ஒரு கேப்ஷனையும் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் இப்போது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது,

இதில் மேலும் படிக்கவும் :