செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 12 ஆகஸ்ட் 2020 (09:12 IST)

அடுத்த அறிவிப்பு வரும்வரை ரயில்கள் இயங்காது! – ரயில்வே அதிரடி அறிவிப்பு!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் ரயில் சேவைகள் அறிவிப்பு வரும் வரை தொடங்கப்படாது என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் கடந்த மார்ச் மாதம் முதலாக இந்தியா முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இடையே ஒரு சில வாரங்களுக்கு குறைந்த அளவில் ரயில் சேவை தொடங்கிய நிலையில் கொரோனா பாதிப்புகள் அதிகமானதால் ஆகஸ்டு 15 வரை ரயில்வே சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மத்திய அரசின் தடை உத்தரவு இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் மீண்டும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது ரயில்வே அமைச்சகம். அதன்படி மத்திய அரசு அறிவிப்பு வெளியிடும் வரை ரயில்சேவைகள் காலவரையின்றி நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் 250 சிறப்பு ரயில்கள் மற்றும் மும்பை மெட்ரோவின் சில சேவைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.