ரஜினி இப்போதும் அரசியலுக்கு வரமாட்டார் என நம்புகிறேன் – இயக்குனர் உறுதி!

Last Modified புதன், 12 ஆகஸ்ட் 2020 (10:01 IST)

இயக்குனர் ஜனநாதன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என தான் இப்போதும் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ஜனநாதன் சமீபத்தில் ரஜினியை வைத்து தான் பக்கிரி படத்தை இயக்க இருந்ததாகவும், அது சில காரணங்களால் நடக்காமல் போய்விட்டது என்றும் கூறியிருந்தார். அந்த படத்துக்கு பக்கிரி என்று பெயரிட்டதாகவும் அது அரசியல் களம் என்றும் கூறியிருந்தார்.

மேலும் அதுபற்றி பேசுகையில் ‘ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என நான் இப்போதும் நம்புகிறேன். அதனால் திரையிலாவது அரசியல் பேசட்டும் என அந்த கதையை சொன்னேன். முதலில் ஆர்வமாக இருந்த ரஜினி காந்த் ஒரு வார்த்துக்குப் பின் அந்த படம் வேண்டாம் என சொல்லிவிட்டார்’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :