ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 8 மார்ச் 2023 (19:18 IST)

விஷாலின் ''மார்க் ஆண்டனி'' பட மோஷன் போஸ்டர் ரிலீஸ்

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மார்க் ஆண்டனி’. இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்படத்தில், விஷாலுக்கு ஜோடியாக ரிதுவர்மா நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து, எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன்  ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார்  இசையமைத்துள்ளார். இந்த நிலையில், ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் மோசன் போஸ்டர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், தற்போது, மார்க் ஆண்டனி படத்தின் மோஸன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.