திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 8 மார்ச் 2023 (15:25 IST)

“பணம் கையில் வந்தால்தான்… தத்துவம் இல்லை அனுபவம்” – இயக்குனர் செல்வராகவனின் இன்றைய ட்வீட்!

இயக்குனர் செல்வராகவனின் சமீபத்தைய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் மோசமான விமர்சனங்களையும் பெற்று வருகின்றன. இந்நிலையில் இப்போது அவர் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார். மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார். இடையில் அவர் நடிகராக அறிமுகமான ‘சாணிக்காயிதம்’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகிய திரைப்படங்கள் அவருக்கு பாராட்டுகளைப் பெற்றுத்தந்தன. அடுத்து பகாசூரன் என்ற திரைப்படம் ரிலீஸாகி கணிசமான கவனத்தை ஈர்த்தது.

சமீபகாலமாக டிவிட்டரில் தொடர்ந்து அறிவுரைப் பதிவுகளாக செல்வராகவன் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் இன்று தன்னுடைய பதிவில் “பணம் கையில் வந்தால்தான் நிஜம். அதற்கு முன் கனவு காணாதீர்கள். செலவுகளை திட்டமிட வேண்டாம்!! அனுபவம். தத்துவம் அல்ல"  எனப் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த அறிவுரைப் பதிவு ஆதரவையும் ட்ரோல்களையும் ஒருங்கே சந்தித்துள்ளது.