விஷாலின் மார்க் ஆண்டனி பட ஷூட்டிங்கில் மீண்டும் ஒரு விபத்து… அதிர்ச்சி தகவல்!
சில தினங்களுக்கு முன்னர் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மார்க் ஆண்டனி. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோ ஒன்றில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென விபத்துக்குள்ளானது. கிரேன் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து படப்பிடிப்புத் தளத்துக்குள் புகுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து பட குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்நிலையில் இந்த விபத்து நடந்து 10 நாட்களுக்குள்ளாகவே மீண்டும் ஒரு விபத்து படப்பிடிப்புத்தளத்தில் நடந்துள்ளது. லைட் கம்பம் ஒன்று கீழே சாய்ந்து லைட் மேன் ஒருவரின் தலையில் அடிபட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அடுத்தடுத்து மார்க் ஆண்டனி படத்தின் ஷூட்டிங்கில் இரண்டு விபத்துகள் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.