விஷாலின் சக்ரா பட ஸ்னீக் பீக் ரிலீஸ்..குறைந்த நேரத்தில் சாதனை

Sinoj| Last Updated: திங்கள், 15 பிப்ரவரி 2021 (23:16 IST)


விஷாலின் சக்ரா பட ஸ்னீக் பீக் இன்று வெளியாகி…குறைந்த நேரத்தில் சாதனை படைந்துள்ளது.

நடிகர் விஷால் நடிப்பில் அவரது விஷால் பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்துள்ள படம் சக்ரா. இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி ரிலீசாகும் என விஷால் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததுடன், இப்படத்தின் தமிழ் வெர்சனுக்கு யு/ஏ என்று சென்சார் சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் தெலுங்கு வெர்சனுக்கு சென்சார் இனிமேல் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இப்படத்தின் முக்கிய் அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என நடிகர் விஷால் அறிவித்த நிலையில் அதன்படி நடிகர் பிரசன்னா நடிகர் விஷாலின், சக்ரா படத்தின் தமிழ், தெலுங்கு ஆகிய ஒரு மொழிகளுக்கான ஸ்னீப் பீக்கை தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். இது இணையதளத்தில்
ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

இந்நிலையில் விஷாலின் சக்ரா பட
ஸ்னீக் பீக் இன்று மாலை ரிலீசான நிலையில் குறைந்த நேரத்தில் சுமார் 8 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.
இந்த ஸ்னீக் பீக் வெளியான 5 மணிநேரத்தில் சுமார் 8 லட்சம் பார்வையாளர்களைப் பெற்று சாதனைப்படைத்துள்ளது.

இதை விஷால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அநேகமாக இன்னும் கொஞ்சம் நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுவிடும் என எதிர்பார்க்கபடுகிறது.இதில் மேலும் படிக்கவும் :