சரத்குமார் - ராதிகாவுடன் 5 ஸ்டார் ஹோட்டலில் விஷால் திடீர் சந்திப்பு!

Last Updated: செவ்வாய், 21 மே 2019 (16:58 IST)
சரத்குமார் மற்றும் ராதிகாவை விஷால் 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடந்த நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் மற்றும் ராதாரவிக்கு எதிராக களமிறங்கி நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றது. இதனால், கடந்த தேர்தலில் இருந்தே சரத்குமாருக்கும் விஷாலுக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. 
 
பிரச்சனையின் உச்சகட்டமாக சரத்குமாரையும், ராதாரவியையும், நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கினார் விஷால். ஆனால், இப்போது விஷால், ராதிகா மற்றும் சரத்குமாரை சந்தித்து பேசினார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
நடிகர் சங்கத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இவர்கள் 5 ஸ்டார் ஹோட்டலில் நடந்த மூவரின் சந்திப்பு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :