செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 15 மே 2019 (15:21 IST)

பயங்கரவாதத்திற்கும், தீவிரவாதத்திற்கும் வித்யாசம் தெரியாத கமல்: சரத்குமார் பேட்டி

நடிகர் கமல் பயங்கரவாதத்திற்கும், தீவிரவாதத்திற்கும் வித்யாசம் தெரியாமல் பேசியுள்ளார் என்று கரூரில் நடிகர் சரத்குமார் கூறினார்.



கரூரில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவரும், நடிகருமான சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தற்போது எதிர்கட்சி வேட்பாளராக இருக்கும் தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி குறித்து கேட்டதற்கு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது சிறந்த முறையில் அந்த இயக்கத்தில் மரியாதை கொடுக்கப்பட்டு, சிறப்பாக செயல்பட வைத்த அந்த இயக்கத்தினை தூக்கி போட்டு விட்டு, தற்போது ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் கட்டுவதற்கே எதிர்ப்பு தெரிவித்த கட்சியிடம் சேர்ந்துள்ளது அவரது மனசாட்சி எப்படி உள்ளது என்பதை அவருக்கு தான் தெரியவேண்டுமென்றார்.

இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று நடிகர் கமல்ஹாசன் கூறியதற்கு பதிலளித்த சரத்குமார், பயங்கரவாதத்திற்கும், தீவிரவாததிற்கும் வித்யாசம் தெரியாமல் நடிகர் கமல் பேசியுள்ளார். அது பற்றி விரிவாக கூறுவதற்கு இது சரியான நேரம் அல்ல, என்றதோடு, பிரதமர் மோடி தான் அடுத்த பிரதமர் என்றும், அ.தி.மு.க ஆட்சி தொடரும் என்றார்.