1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 14 மே 2019 (21:17 IST)

அயோக்யா கதை திருட்டா ? பார்த்திபன் குற்றச்சாட்டுக்கு இயக்குநர் பதில்..

விஷால், ராஷிகண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார் நடிப்பில் இயக்குனர் வெங்கட்மோகன் இயக்கிய 'அயோக்யா' திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த படம் தன்னுடைய 'உள்ளே வெளியே' படத்தின் காப்பி என்று இந்த படத்தில் நடித்துள்ள ஆர்.பார்த்திபன் தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இதனால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், ''அயோக்கியா'த்த்தனம்! 94-ல் வெளியான என் ஜினல் ஜினல் ஒரிஜினல் 'உள்ளே வெளியே'படத்தை அப்படியே லவுட்டி என்னிடம் உரிமை பெறாமல் தெலுங்கில் டெம்பர் என ஹிட் படம் ஆக்கி தமிழிலும் தற்போது! அதில் என்னையும் நடிக்க வைத்து என்ன ஒரு அயோக்கியத்தனம்? குற்ற உணர்ச்சி இல்லாமல் எப்படி? வழக்கு செய்யாமல், பெருமையுடன் பதிவிடுகிறேன் என்று பதிவு செய்திருந்தார்.
 
பார்த்திபனின் 'உள்ளே வெளியே' திரைப்படத்திலும் முதல் பாதியில் போலீசாகி அலப்பரை செய்யும் பார்த்திபன் இரண்டாம் பாதியில் ஒரு தற்கொலையை பார்த்தவுடன் திருந்தி நல்ல போலீஸ் ஆவது போல் கதை அமைக்கப்பட்டிருக்கும்.
 
இருப்பினும் பார்த்திபனின் இந்த டுவீட்டை பார்த்த பலர், 'உங்கள் படத்தின் காப்பி என்று தெரிந்தும் எப்படி நடிக்க ஒப்புக்கொண்டீர்கள் என்றும், இந்த டுவீட்டே நீங்கள் வழக்கு போட்டதற்கு சமம் என்றும், பலர் கமெண்ட்டுக்களை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
 
தற்போது குறித்து அயோக்யா படத்தின் இயக்குநர் கூறியதாவது :
 
இயக்குநர் பார்த்திபன் பதிவை நானும் பார்த்தேன். அது அவரது கருத்து. இந்தக் கதையை நான் எழுதவில்லை. தெலுங்கில் இக்கதையை எழுதிய வக்கந்தம் வம்சியிடம்தான் இதுபற்றி கேட்ப வேண்டும்.
 
ஆனால் நான் இக்கதையில் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றியுள்ளேன். என்று தெரிவித்துள்ளார்.