1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : சனி, 12 அக்டோபர் 2019 (16:42 IST)

விஷால் திருமணம் நின்று போனதா..? அவர் அப்பாவே சொல்லிட்டார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் , தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளராகவும்  இருந்த விஷால், நடிகர் சங்கத்தின் கட்டிடம் முடித்த பிறகுதான் திருமணம் செய்துக்கொள்ளப் போவதாக தெரிவித்திருந்தார்.


 
இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் ஹைதராபாத்தைச் சேர்ந்த அனிஷா அல்லா ரெட்டி என்பவருடன் விஷாலுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதையடுத்து அக்டோபர் மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் இரு குடும்பத்தாரும் தீவிரமாக திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். ஆனால், இதற்கிடையில் இந்த திருமணம் நிறுத்தப்பட்டதாக வதந்திகள் பரவியது. காரணம், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனிஷா ரெட்டி தனது சமூக வலைத்தளத்தில் விஷாலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நீக்கிவிட்டார். 
 
பின்னர் சில நாட்கள் கழித்து அனிஷாவே இது வெறும் வதந்தி என்று கூறி அதனை மறுத்தார். இந்நிலையில் தற்போது  விஷாலின் அப்பா G.K.ரெட்டி,  தமயந்தி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஷாலின் திருமணம் பற்றி பேசியுள்ளார். அதாவது, தனது திருமணத்தை நடிகர் சங்க மண்டபத்தில் தான் நடத்துவேன் என விஷால் உறுதியளித்திருந்தார்.     வாக்கு எண்ண நீதிமன்ற உத்தரவளித்தால் விஷால் அணி நிச்சயம் வெற்றி பெறும். பின்னர் நடிகர் சங்க கட்டிட வேலைகளை விரைவாக முடித்துவிட்டு அவர் சொன்னது போல விஷாலின்  திருமணம் அங்கு தான் நடக்கும். விஷால் அனிஷா திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என உறுதியளித்தார்.