ஹாலிவுட் ரேஞ்சிற்கு தூள் கிளப்பிய "ஆக்‌ஷன்" டீசர் - விஷாலுக்கு குவியும் பாராட்டுக்கள்!

Papiksha| Last Modified வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (17:48 IST)
ஆம்பள படத்தின் வெற்றிக்கும் பிறகு இயக்குனர் சுந்தர் சி மீண்டும் நடிகர் விஷாலை வைத்து "ஆக்ஷன்" என்ற படத்தை இயக்கி வருகிறார். விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கும் இப்படத்தில்  ஐஸ்வர்யா லட்சுமி , யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் படத்தின் வில்லனாக  வேதாளம், காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்த கபீர் துஹான் சிங் வில்லனாக நடிக்கிறார். 


 
இப்படத்திற்கும் ஹிப்ஹாப் தமிழா ஆதி தான் மீண்டும்  இசையமைக்கிறார். டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட அழகான லொகேஷன்களில் படமாக்கப்பட்டுள்ளது .  அண்மையில் விஷாலின் மிரட்டலான ஆக்ஷன் காட்சியுடன் வெளிவந்த இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 
 
இந்நிலையில் சற்றுமுன் ஆக்‌ஷன் படத்தின் டீசர் வெளியாகி கோலிவுட்டை கலக்கி வருகிறது. பக்கா மாஸ் ஆக்ஷன் காட்சிகளில் விஷால் பின்னி பெடல் எடுத்துள்ளார். ஹாலிவுட் ரேஞ்சிற்கு கலர்ஃபுல்லான காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்த டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ரசிகர்கள் பலரும் விஷாலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :