வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 23 டிசம்பர் 2022 (12:40 IST)

விஷாலின் லத்தி திரைப்பட முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?

விஷால் நடித்துள்ள லத்தி திரைப்படம் நேற்று ரிலீஸான நிலையில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

விஷால் நடித்த ’வீரமே வாகை சூடும்’ திரைப்படம் இந்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியான நிலையில் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதையடுத்து விஷாலின் அடுத்த படமாக லத்தி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குகளிக் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் முதல்நாளில் தமிழகத்தில் இந்த படம் வெறும் 2 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாஸ் ஹீரோவான விஷால் தொடர்ந்து தோல்வி படங்களாகக் கொடுத்ததால் இப்படி ஒரு மோசமான வசூலை முதல் நாளில் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் சேட்டிலைட் உரிமை மட்டும் சுமார் 24 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாம். இது இதுவரை விஷால் படத்துக்கு இல்லாத ஒரு தொகையாகும்.