திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 22 டிசம்பர் 2022 (15:49 IST)

விஷாலின் லத்தி படத்துக்கு இப்படி ஒரு டிமாண்டா?... மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்ட சேட்டிலைட் உரிமை!

விஷாலுக்கு இந்தி டப்பிங் உரிமை மிகப்பெரிய ப்ளஸ் பாய்ண்ட்டாக அமைந்துள்ளது.

விஷால் நடித்த ’வீரமே வாகை சூடும்’ திரைப்படம் இந்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியான நிலையில் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதையடுத்து விஷாலின் அடுத்த படமாக லத்தி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் இன்று ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் சேட்டிலைட் உரிமை மட்டும் சுமார் 24 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாம். இது இதுவரை விஷால் படத்துக்கு இல்லாத ஒரு தொகையாகும்.