எக்ஸ் காதலிக்கு பர்த்டே வாழ்த்து சொன்ன விஷால்
நடிகர் விஷால் தனது முன்னாள் காதலி வரலட்சுமி சரத்குமாருக்கு டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
நடிகர் விஷாலும் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் காதலித்து வருவதாக நீண்ட காலங்களாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால் விஷால் தெலுங்கு நடிகை அனிஷாவை திருமணம் செய்ய உள்ளார்.
இந்நிலையில் விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் டியர் வரலட்சுமி சரத்குமார். இந்த ஆண்டு உனக்கு நல்ல ஆண்டாக அமைய வேண்டும் என்றும் பல சாதனைகள் புரிந்து சந்தோஷமாக இருக்க பிராத்திப்பதாகவும் வாழ்த்து கூறினார். இதற்கு நெட்டிசன்கள் கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.